Food Tech

About Food Tech Exhibition



Download 2017 Invitation

மதுரை உணவு தொழில்களின் அச்சாக திகழ்கிறது. மதுரையின் புகழுக்கு உணவு தொழிலும் முக்கிய பங்கு உண்டு. பாண்டியன்கள் காலம் தொட்டு எண்ணெய் உற்பத்தி வணிகமும் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் நிறுவனங்கள் பிஸ்கட், பேக்கரி, அப்பளம், குளிர்பானம், மிட்டாய் மற்றும் ஊறுகாய் என தனித்துவம் வாய்ந்த உணவு தொழில்கள் இங்கு உள்ளன.

இவ்வளவு சிறப்புள்ள இந்த தொழில்கள் கட்டாயம் நவீன படுத்தப்பட்டு மேம்பட வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள பண்ணாட்டு, உள்நாட்டு பகாசூர நிறுவனங்கள் மற்றும் புதிய உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தில் தவறான சட்ட விதிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தொழில்களை புதுபித்து முன்னேறுவது கால கட்டாயம்.

இந்தியாவை பொறுத்தவரை உணவு தொழில்நுட்ப கண்காட்சி டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் தான் நடைபெறுகிறது. தென் பகுதியில் உள்ள உணவு தொழில் புரிவோர் அவ்வாறான தொழில்நுட்ப கண்காட்சியை காண வேண்டி அங்கு செல்வது மிக குறைவு.

மடீட்சியா இந்தியாவின் தென் கோடிப் பகுதி உணவு தொழில்களை முன்னேற்றத்திற்காக சிறப்பான உணவுத் தொழில்நுட்ப கண்காட்சியை முதன் முறையாக ஏற்பாடு செய்துள்ளது. நம் மடீட்சியாவுடன் இணைந்த சங்கங்கள் அவர்களது தொழில் சம்மந்தமான இயந்திரங்களை, தொழில்நுட்பங்களை கண்காட்சியில் இடம் பெற உறுதியளித்துள்ளனர். கண்காட்சியின் வெற்றிக்கு அவர்களது பங்கு முக்கியமானதாகும்

  • Features

    • உணவு தொழில்நுட்பம் உணவு பாதுகாப்பு உயர்தரம், உணவு பதப்படுத்துதல், உணவகங்கள், உணவு பேக்கிங், வேளான் விளைபொருட்கள் முதல் நிலை பதப்படுத்தப்பட்ட காய், கணிகள், தாணியம் மற்றும் இறச்சி வகைகள் அனைத்து வகைக்கும் பயன்;வுள்ள நவீன தொழில்நுட்பங்களை இக்கண்காட்சிக்கு கொண்டு வருகின்றனர்.

  • Special Attraction

    • APEDA - உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் உருவாக்க, ஏற்றுமதியார்களை மேம்படுத்த முக்கிய தலைப்புகளில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
    • IICPT Indian Institute of Corp Processing Technology - தஞ்சையில் உள்ளது இங்கு பல்வேறு உணவு தயாரிப்பு வகைகள் பயிர்கள் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்கலிருந்து மாணவர்கள் B.Tech, B.Sc, M.Sc & M.Tech பட்டங்களுக்கான படிப்பு கற்று வருகின்றனர்.
    • CFTRI – Central Food Technological Research Institute -மத்திய உணவு ஆராய்ச்சி மையம் மைசூரில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்நிறுவனம் பல்வேறு உணவு ஆராய்ச்சிகளை உலகுக்கு அளித்துள்ளது. மிக பெரிய ஆய்வுக்கூடங்கள் பலதுறைகளில் உள்ளது. உலகமெங்கும் மாணவர்கள் B.Tech, B.Sc, M.Sc & M.Tech என பட்டப்படிப்புகளை பயில்கின்றனர்.
    • APEDA – Agriculture & Processed Food Products Exist Development Authority - விவசாயம் மற்றும் உணவு பதனீட்டு பொருட்கள் ஏற்றுமதியில் அதிகரித்து முன்னேற்ற பல சலுகைகள் மாணியங்கள் வழங்கி, உணவு பதப்படுத்துல் தொழிலை மேம்படுத்துகிறது. ஏற்றுமதியாளர்கள் இங்கு கட்டாயம் பதிவு பெற வேண்டும் மேலும் இறக்குமதியாளர்கள் பற்றழிய முழு விபரங்கள், ஏற்றுமதி வாய்ப்பு எவ்வாறு உள்ளது போன்ற தகவல்கள் அங்கு பெறலாம், ஏற்றுமதி உணவு பொருட்களின் தகுதி ஆய்வு, வெளிநாடுகளில் செய்யப்படும் பொருட்களின் பயன்பாடு புள்ளி விபரம் போன்றவை பெற முடியும்.
    • MOFRI- Ministry of Food Processing Industries - உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம். நம்நாட்டில் வேளாவிளை பொருட்கள் அதிக அளவில் அறுவடைக்கு பின் சேதாரம் ஆகிறது. அவற்றை பதப்படுத்தி, மதிப்பு கூட்டப்படுத்துதல் சேதாரம் தவிர்க்க படுகிறது. எனவே பதப்படுத்துதல் தொழில்களை முன்னேற்ற அதிக எண்ணிக்கை உருவாக்க இந்த அமைச்சகம் செயல்படுகிறது.
    • Food Court - மதுரை புகழ்பெற்ற உணவங்கள் பங்கு பெறுகின்றன. மாலைவேளையில் தினசரி சமையல் போட்டி, சாப்பிடும் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

  • Announcements

    • FOODTECH 2017 அந்த கண்காட்சி பிப்ரவரி 24-27, 2017 தமுக்கம் மதுரையில் நடைபெறுகிறது. இதில் வட, தென் மாநிலங்களிலிருந்து நவீன உணவு இயந்திரங்கள், ஹோட்டல் மற்றும் கிச்சன், பேக்கரி, மிட்டாய் மற்றும் Fruit & Vegitable Processing Units-ம் பங்கு பெறுகின்றன. ஆனைத்து வகையான பேக்கிங் மெசின்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவு பகுப்பாய்வங்கள், உணவு சேர்மானங்கள்( Food Additives) இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அறிந்து IICPT இந்திய பயிர்பதன தொழில்நுட்ப கூடம்( CFTRI) மற்றும் APEDA மடீட்சியாவுடன் சேர்ந்து வெற்றிகரமாக FOODTECH 2017 2017 நடத்திட உள்ளது. IICPT நடமாடும் உணவு பகுப்பாய்வகமும், கண்காட்சி மைதானத்திற்கு கொண்டு வருகின்றனர். CFTRI மாடல் கிச்சன் வாகனம் ஒன்றை நமது தெருக்கடை உணவகங்களை தரமாக உயர்த்தும் நோக்கில் கொண்டு வருகின்றனர்.

      கண்காட்சி நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை உள்ளது. காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை வணிகத்திற்கும் 5.00 மணிக்கு மேல் பொது மக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      புட்டெக் 2017 கண்காட்சி தென் தமிழகம் கேரளம் வரை விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் அங்குள்ள சிறு, குறு சுதேசி நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தி தவறாது கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      மூன்று கருத்தரங்குகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உணவு தொழிலின் புதிய பரிமாணங்கள், தொழில்சாலையில் உணவு பாதுகாப்பு தர மேலாண்மை FSMS உணவு ஏற்றுமதி வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் விஞ்ஞானிகள், IICPT, CFTRI & APEDA- விலிருந்து விஞ்ஞானிகள், தொழில் வல்லூனர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கின்றனர், உணவு தொழில் புரிவோருக்கு கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

      Download Tamil Invitation Download English Invitation

Layout Settings