24 Feb

FOOD TECH EXHIBITION-2017

Date : 24/02/2017 to 27/02/2017

மதுரை உணவு தொழில்களின் அச்சாக திகழ்கிறது. மதுரையின் புகழுக்கு உணவு தொழிலும் முக்கிய பங்கு உண்டு. பாண்டியன்கள் காலம் தொட்டு எண்ணெய் உற்பத்தி வணிகமும் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் நிறுவனங்கள் பிஸ்கட், பேக்கரி, அப்பளம், குளிர்பானம், மிட்டாய் மற்றும் ஊறுகாய் என தனித்துவம் வாய்ந்த உணவு தொழில்கள் இங்கு உள்ளன. 

FOODTECH 2017 அந்த கண்காட்சி பிப்ரவரி 24-27, 2017 தமுக்கம் மதுரையில் நடைபெறுகிறது.
 இதில் வட, தென் மாநிலங்களிலிருந்து நவீன உணவு இயந்திரங்கள், ஹோட்டல் மற்றும் கிச்சன், பேக்கரி, மிட்டாய் மற்றும் Fruit & Vegitable Processing Units-ம் பங்கு பெறுகின்றன. ஆனைத்து வகையான பேக்கிங் மெசின்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவு பகுப்பாய்வங்கள், உணவு சேர்மானங்கள்( Food Additives) இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அறிந்து IICPT இந்திய பயிர்பதன தொழில்நுட்ப கூடம்( CFTRI) மற்றும் APEDA மடீட்சியாவுடன் சேர்ந்து வெற்றிகரமாக FOODTECH 2017 2017 நடத்திட உள்ளது. IICPT நடமாடும் உணவு பகுப்பாய்வகமும், கண்காட்சி மைதானத்திற்கு கொண்டு வருகின்றனர். CFTRI மாடல் கிச்சன் வாகனம் ஒன்றை நமது தெருக்கடை உணவகங்களை தரமாக உயர்த்தும் நோக்கில் கொண்டு வருகின்றனர். 

கண்காட்சி நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை உள்ளது. காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை வணிகத்திற்கும் 5.00 மணிக்கு மேல் பொது மக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புட்டெக் 2017 கண்காட்சி தென் தமிழகம் கேரளம் வரை விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் அங்குள்ள சிறு, குறு சுதேசி நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தி தவறாது கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்று கருத்தரங்குகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உணவு தொழிலின் புதிய பரிமாணங்கள், தொழில்சாலையில் உணவு பாதுகாப்பு தர மேலாண்மை FSMS உணவு ஏற்றுமதி வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் விஞ்ஞானிகள், IICPT, CFTRI & APEDA- விலிருந்து விஞ்ஞானிகள், தொழில் வல்லூனர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கின்றனர், உணவு தொழில் புரிவோருக்கு கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.